எழுவர் விடுவதலை தொடர்பான பேரணி நடந்துள்ளது. இந்த நிலையில், அரசு தரப்பு சி.பி.ஐ. அதிகாரியான தியாகராஜனின் பேச்சு இங்கே முக்கியத்துவம் பெறுகிறது. அதை இங்கே பதிவிடுகிறேன்
௧. பேரறிவாளன், தான் எதற்காக பேட்டரி வாங்கிக் கொடுத்தேன் என்று தெரியாது என்று கூறியதை நான் வாக்குமூலத்தில் பதிவிடவில்லை. காரணம், வழக்கு நடந்து கொண்டிருந்த நேரத்தில் அதை குறிப்பிட்டால், அது வாக்குமூலமாகாது.
௨. பதினாங்கு ஆடுகளுக்குப் பிறகு They are entitled for review. இந்த இருபத்திஐந்து வருடங்களில் அவர்கள் மேல் எந்த குறையும் கூறப்படவில்லை. விடுதலைக்கு பரிந்துரை மட்டும் அல்ல, அதை நான் மனித உரிமையாக கருதுகிறேன்.
௩. அறிவு (பேரறிவாளன்) சொன்னது உண்மையாக இருக்கலாம் என்பதை உறுதிப்படுத்த, எங்களுக்கு பின்னாளில் ஒரு ஆவணம் கிடைத்தது. சிவராசன், ஒரு ஒயர்லஸ் மெசேஜ்-ல், இது வரைக்கும் இதைப்பற்றி யாருக்கும் சொல்லவில்லை. அந்த இந்தியப் பெண்ணிடம் தவிர என்று கூறியிருந்தார். இது ஒரு internal evidence
௪. SIT இந்த வழக்கை விசாரணை செய்து கொண்டிருந்த போதே, ஜெயின் கமிஷன் 'larger conspiracy' என்றொரு விசாரணையை நடத்தி வந்தார்கள். என்னுடைய தாழ்மையான கருத்து என்னவென்றால், அயல்நாட்டு சதி குறித்த முழு பரிமாணத்தை நாம் கொண்டு வரவில்லை. உள் நாட்டு சாதியம் இருக்கலாம் என்பதை risk எடுத்து சொல்கிறேன்..
௫. பாதிக்கப்பட்டவர்கள் எங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்று சொல்வதற்காக, ஏழுபேருக்கும் அநீதி இழைக்கக் கூடாது. இழக்கப்பட்டவர்களின் இடத்தை எந்த தண்டனையாலும் நிரப்ப முடியாது. ஒரு சிறைச்சாலையில் உள்ளகைதிகளை அந்த நாட்டு மக்கள் எப்படி நடத்துகிறார்கள் என்பதில் தான் அந்த நாட்டின் பக்குவம் புரிபடுகிறது என்று நெல்சன் மண்டேலா சொல்கிறார். இந்த விவகாரம் மனிதர்களின் எதிர்காலத்தை உள்ளடக்கியது. இதனால், இதில் மத்திய மாநில அரசுகளின் சண்டைக்கு இடம் இருக்கக் கூடாது.
௬.. ஒரு மனிதனின் முக்கியமான உரிமை என்பது சுதந்திரம். அந்த சுதந்திரத்தை நாம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தண்டனைக்காக பறிக்கலாம். ஆனால், உங்களுக்கு மரணதண்டனையில் இருந்து தப்பிக்க ஒரு வாய்ப்பு அளிக்கப் பட்டதெ! மறுபடியும் ஒரு சலுகையை எதிர்பார்க்கலாமா என்கிற கேள்வி தவறு. ஏனென்றால், வாழ்க்கை முழுவதும் ஆயுள் தண்டனையில் கழிய வேண்டும் என்பது மரண தண்டனையைக் காட்டிலும் கொடியது!
௭. நான் அந்த தவறை அன்று செய்யாமல் இருந்திருந்தால், ஒருக்கால் பேரறிவாளன் இன்று வெளியே நடமாடிக் கொண்டிருந்திருக்கலாம்.
https://www.youtube.com/watch?v=-7EKSCMlSSQ
0 comments:
Post a Comment