அன்புக்குரிய
சக பணியாளர்களே,
நான் செப்டம்பர்
2013 ல் ரிசர்வ் வங்கியியின் 23 ஆவது
கவர்னராக பதவி ஏற்றுக் கொண்டேன். அந்த நேரத்தில், இந்திய ரூபாயின் மதிப்பு தினமும்
ஊசலாடிக் கொண்டிருந்தது; பண வீக்கம் அதிகமாக இருந்தது மற்றும் வளர்ச்சி பலவீனமாக
இருந்தது. இந்தியா, ‘உடையக் கூடிய ஐந்து நாடுகள்’ எனும் பட்டியலில் ஒன்றாகக்
கருதப் பட்டது. கவர்னராக என்னுடைய தொடக்க உறையில், நான் உங்களுடன் கலந்து
ஆலோசித்து ஒரு செயல்திட்டத்தை முன்வைத்தேன். அதில் பண வீக்கத்தை குறைக்க, அந்நிய
நாட்டு பண மதிப்பிலான என்.ஆர்.ஐ (B) வைப்பு நிதியை அதிகரிப்பதன் மூலம் அந்நிய செலாவணியை
அதிகரிக்க ஒரு புதிய கட்டமைப்பையும் இணைத்திருந்தேன். மேலும், புதிய உலகளாவிய
மற்றும் முக்கிய வங்கிகளுக்கான வெளிப்படையான உரிமத்தை வழங்க, தூய்மையான நேர்மை
பொருந்திய குழுக்களை அமைப்பது, பாரத் பில் கட்டண அமைப்பு மற்றும் ட்ரேட் ரிசீவபில்
எக்ஸ்சேஞ் போன்ற புதிய நிறுவனங்களை அமைப்பது, கைப்பேசிகள் மூலம் கட்டணங்களை
விரிவுபடுத்துவது மற்றும் விரிவான கடன் அமைப்பு ரீதியிலான துயரத்தை உணரவும்,
சரிசெய்யவும், பெரியதொரு தரவு தளத்தை உருவாக்க நான் வழி செய்ய உறுதி
அளித்திருந்தேன். இத்தகைய செயல்திட்டங்களை நடைமுறை படுத்துவதன் மூலம், நான்
சொன்னேன், ‘உலக பொருளாதார சந்தை ஏற்படுத்திய புயலையும் கடந்து, எதிர்காலத்தை அடைவதற்கான
பாலத்தை நம்மால் கட்டமைக்க முடியும்” என்று.
இந்த நாளில் ரிசர்வ்
வங்கியில் இருக்கும் நாம் மேற்கண்ட அனைத்து பரிந்துரைகளையும் செயல்படுத்திவிட்டோம்
என்பதில் நான் பெருமை கொள்கிறேன். பணவீக்கத்தை பாதியாக குறைக்க உதவிய ஒரு புதிய கட்டமைப்பு
இங்கே இருக்கிறது. இது, பல ஆண்டுகளுக்குப் பிறகு, வைப்பு நிதி சேமிப்பாளர்கள், நிஜமான
நேர்மறை வட்டி விகிதங்களை சுவைக்க வழி வகுத்தது. மேலும் நாம் முதலில் வட்டி
விகிதங்களை உயர்த்தி இருந்தாலும், பின்னாளில் 150 பேஸ்
பாயிண்டுகள் வரை வட்டி விகிதங்களை குறைக்க முடிந்தது.
இதனால், அரசாங்கம்
ரிசர்வ் வங்கியிடம் செலுத்த வேண்டிய பெயரளவிலான வட்டி விகிதம், முதிர்வு காலத்தை அதிகரித்து
வழங்கிய போதும் குறைய வாய்ப்பு கிடைத்தது. (முதிர்வு காலத்தைப் பற்றி மேலும் கூற
வேண்டுமானால்), நம்முடைய அரசாங்கம் 40 வருட கால பாண்டுகளை வழங்க முதல் முறையாக
தகுதி பெற்றது. முடிவாக, 2013 ல் நாம் பாதுகாத்த அந்நிய வைப்பு நிதி வெளியேறியதற்கு
பிறகும், அதனால் எந்த பாதிப்பும் ஏற்படாமல், நம்முடைய செயல்திட்டங்களின் மூலமாக, நாணயம்
திடநிலையை அடைந்ததோடு, நம்முடைய அந்நிய செலாவணி இருப்பும் வரலாறு காணாத வகையில்
உயர்ந்தது.
இன்று நாம்
விரைவாக வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கும் உலகளாவிய பெரிய பொருளாதார சக்தியாக உருவாகியிருக்கிறோம்.
அதோடு, ‘உடையக் கூடிய ஐந்து நாடுகள்’ பட்டியலில் இருந்து வெளியேறிப் பல தூரம்
கடந்து வந்து விட்டோம்.
பொதுத் துறை
வங்கி மேலான்மைக்கென்று தனியாக ஆட்களை நியமிக்கும் பணியில் சீர்திருத்தங்களை
கொண்டு வர, RBI-ஆல் பணியமர்த்தப்பட்ட நாயக் கமிட்டியின் பரிந்துரையின்
பேரில், Bank Board Bureau எனும் அமைப்பை உருவாக்கி அரசாங்கத்திற்கு
நாம் உதவியது, செயலிழந்து வரும் திட்டங்களில் இருந்து கடன்களை திரும்பப் பெற
வங்கிகளுக்கு உதவும் புதிய அமைப்புகளை உருவாக்கியது, Asset Quality Review (AQR) ன் கீழ், உரிய மதிப்பளிக்கப்படாத மோசமான
கடன்களை சரியான நேரத்தில் தரப் பரிசோதனை செய்வதற்கான உந்துதலை வங்கிகளுக்கு
அளித்தது என, நம்முடைய முதல் வாக்குறுதிகளில் சொன்னவற்றிற்கு மேலாக நிறையவே
செய்திருக்கிறோம்.
தேசிய கட்டண
நிறுவனத்திற்காக, பொதுவான கட்டண முகமையை உருவாக்க வழிவகை செய்யும் ஒரு செயல் திட்டத்தை
வடிவமைக்க நாம் வேலை செய்திருக்கிறோம். இது கூடிய விரைவில், செல்பேசிகளுக்கு
இடையிலான கட்டணங்களை செலுத்தும் பணியில் ஒரு புரட்சியை ஏற்படுத்தப் போகிறது.
இவற்றையும்
மீறி, RBI குள்ளாக, நம்முடைய மூத்த அங்கத்தினரின்
வடிவமைப்பின் அடிப்படையில், பல ஒழுங்கு மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளும்
நடந்திருக்கின்றன. நாம் நம்முடைய பணியாளர்களின் திறன் மற்றும் நிபுணத்துவத்தை
வலுப்படுத்தி பிற நாட்டவர்களுக்கு சளைத்தவர்கள் இல்லை எனும் நிலைக்கு கொண்டு
வந்திருக்கிறோம். நம்முடைய செல்திட்டங்கள் அனைத்திலும், குழுவின் மேலான குடிமகர்களாகிய
பத்ம விபூஷன் டாக்டர். Anil Kakodkar, அணு ஆற்றல் கமிஷனின் முன்னாள் தலைவரான, பத்ம
பூஷன் மற்றும் Magsaysay விருது பெற்ற சுய உதவிப் பெண்கள் அமைப்பின் Ela Bhatt அவர்களின் வழிகாட்டல்களை பெற்றிருந்தோம்.
நம்முடைய
மக்களின் ஆற்றலும், நேர்மையும், நம்முடைய செயல்களில் இருந்த வெளிப்படைத்
தன்மையும், நிகரற்றதாக இருந்தது. இத்தகைய ஒரு நல்ல அமைப்பில் பங்கு வகித்தது
குறித்து பெருமைப் படுகிறேன்.
நான் ஒரு அறிவு
சார் மனிதன். மேலும் நான் எப்போதும் தெளிவாக சொல்லி இருக்கிறேன்- என்னுடைய தாயகம் சிந்தனா
உலகத்திலேயே இருக்கிறது என்று.
நான் சிகாகோ
பல்கலைக் கழகத்திற்கு செல்லும் இந்த நேரத்தில், என்னுடைய மூன்றாண்டு கால பணி
முடிவடையைத் துவங்கும் இந்த நேரத்தில், நாம் எதை எல்லாம் செய்து
முடித்திருக்கிறோம் என்கிற மீள்பார்வைக்கு இது சரியான ஒரு தருணமாக அமைந்தது.
முதல் நாளில்
நாம் வாக்குறுதி அளித்த அனைத்தும் செய்து முடிக்கப்பட்ட நிலையில், இரண்டு அடுத்தடுத்த
முன்னேற்றங்களை சாதிக்க வேண்டியதிருக்கிறது. நம்முடைய பண வீக்கமே முக்கிய இலக்காக
இருக்க வேண்டும் எனினும், நமது கொள்கைகளை தொகுக்கும் பணவியல் கொள்கைக் குழுவை அமைக்க
வேண்டியிருக்கிறது. மேலும், Asset Quality
Review விற்கு கீழ் நம்
முயற்சிகளால் தொடங்கப்பட்ட, வங்கி இருப்பு நிலைகுறிப்புகளின் நம்பகத் தன்மையை ஏற்கனவே
அதிகப் படுத்தியுள்ள செயல்பாடுகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன. குறுகிய கால
அடிப்படையில், சர்வதேச நடவடிக்கைகளும் சில ஆபத்துக்களை முன்னிறுத்திக்
கொண்டிருக்கின்றன.
இத்தகைய
சவால்களை நாம் வெற்றிகரமாக கடப்பதை நான் கண்கூடாகக் கண்டு ரசிக்க ஆயத்தமாய்
இருக்கிறேன் என்பதோடு, அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், September 4, 2016- ல் என்னுடைய பணி நாட்கள் முடிவடைந்த பிறகு,
அறிவுசார் செயல்பாடுகளுக்கு நான் திரும்புகிறேன் எனும் செய்தியை உங்களோடு
பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நான் எப்போதும் இந்திய நாட்டிற்காக சேவை செய்ய
காத்திருக்கிறேன் என்றும் சொல்லிக் கொள்கிறேன்.
சக பணியாளர்களே,
நாம் அரசாங்கத்தோடு இணைந்து, கடந்த மூன்று ஆண்டுகளில், பருப்பொருளியல் மற்றும்
நிறுவன திடநிலைக்காக போராடியிருக்கிறோம். Brexit அச்சுறுத்தலைப் போன்ற சந்தை ஏற்ற இறக்கங்களை சமாளிக்க
நம்முடைய செயல்பாடுகள் துணை புரியும் என்று நான் தீர்க்கமாக நம்புகிறேன். அந்நிய NRI (B) வைப்பு
நிதிகளை திரும்பத் செலுத்தும் பணிக்கு நாம் தேவையான ஏற்பாடுகளை செய்து
வைத்திருக்கிறோம் என்பதால், மேற்கொண்டு அந்தப் பணியை சரிவர செய்துவிட்டாலே போதும்
என்கிற நிலை தான் இருக்கிறது. உங்களுடைய சாதனைகளே உங்களுடைய மன உறுதிக்கு வழி
வகுத்திருக்கிறது.
அரசாங்கத்தின்
சீர்திருத்தங்களோடு, உங்களுடைய செயல்பாடும் சேர்ந்து, நாம் உருவாக்கி
வைத்திருக்கும் இந்த அடித்தளத்தின் மீது சரியான கட்டமைப்பை உருவாக்கி, மேலான வேலைவாய்ப்பு
உருவாக்கத்திற்கும், நம் மக்களின் செழிப்பான வாழ்க்கைக்கும் வரும் ஆண்டுகளில்
வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன். உங்களுடைய துணையோடு, பின்வருபவர்
நம்மை மேலும் சிறப்பான இடத்திற்கு கொண்டு செல்வார் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது.
நான் உங்களோடு மேலும் சில மாதங்கள் பணியாற்றுவேன் என்றாலும், உழைப்பாலும், கொஞ்சமும்
குறையாத ஆதராவலும் என்னைத் தழுவிய RBI ன் குடும்பத்தினர் அனைவருக்கும் நான்
முன்னதாகவே நன்றி செலுத்திக் கொள்கிறேன். இது ஒரு அற்புதமான கூட்டுப் பயணமாக
இருந்தது!
நன்றியுணர்ச்சியுடன்,
உங்கள்
உண்மையுள்ள,
ரகுராம் G. ராஜன்.