Pages

Sunday, November 7, 2010

பழந்தமிழ் பொங்கலின் ஒரு சோற்றுப் பதம்!

ஐந்து ஆண்டுகள்!

கவின்மிகு உருவம்,அல்கல் சனித்தாற்போல் ஞாபகம்
சேல்விழி ஒளிரக்காண, நாவில் நாமகளாம் என் அன்னை,
பசுவது பாச்சியை பாசமுடன் சிந்த,
பாலைத் தங்காள், அதன்
அணல் தொட்டு
கொஞ்சமாய் அஞ்சிப் பின் கொஞ்சிக்
களித்த தினம்,இன்னியம் இசைக்கிறது!

ஆத்தியன் தொழுகையில் ஆதாளிமன்னனும்,
கருமத் தடையில் மார்சாலத்தளையும்,
ஆதுலமாமென,ஆதிரர் மொழிந்ததாய்,
ர் பாட, அகஸ்மாத்தாய் கெட்டேன்.
அது அஞ்ஞதையென ஆசூரறிய விளக்க எண்ணி,
பூனை ஒன்றை கொணர்ந்து 
வந்தேன்.

ஈண்டு பூப்பெய்திட்ட இளையாள் வதுவை,
குவலயம் குலுங்க,மார்ச்ச
னை அதிர,
ஈரூற்றது - எம் பூனை வழியிற் நிற்க!
இதுநாள் வரை ஈடேற்றம்தனை அகத்தே ஈன்ற
என் இற்புலி,
இன்று,மூப்பெய்தி மரித்துப்
பின் மொக்கம் புகுந்தது.

அந்தோ!

மூடதை அழிக்க,மூஷிகம் விழுங்கும் மூர்த்தியைக் கொன்றதால்,
சற்பனைச் சூழ,சாருகன் நாமம் பெற்று,
இறுக முடுக்கிய தாம்பின் இழுவையால்,
யமலோக வேந்தன் பாசனின் இலக்காய் போனேனே..!
விளக்கம் :

தமிழில் உள்ள பழமையான சொற்களின் ஊடே ஒரு சமுதாய நல்லிலக்கணத்தை அமிழ்த்தியுள்ளேன். சகுன
த் தடை என மூடர்கள் சாடும் பூனை ஒன்றை வீட்டிற்கு கொண்டு வந்து ஐந்து ஆண்டுகள் வளர்த்து, தங்கையின் திருமணம் முடிந்த பிறகு, அது தடை அல்ல என ஆடவன் ஒருவன் நிரூபனம் செய்கிறான். ஆனால் அவனே, அது இறந்த பின், தான் அதை மக்களை திருத்துவதற்காக உபயோகம் செய்ததால் இறந்ததோவென்று அழுகிறான்..

I hope you all liked the poem. I prefer not to explain the meaning word by word. If you find some unknown words, better buy a Tamil Agarathi and know the meaning. I promise you all, if you ever try to get into your language, YOU will be overwhelmed by the interest it creates in you.

NOTE: I accept the fact that Tamil is lacking global reach and struggles to compete this technological boom. But since fathers are outdated, we should never disrespect him or neglect him. We should accept its defects and try to fill those. After all, his contributions to you is large. You will realize his value,when he is dead.Why let your language to die so? Rescue it before you mourn for it.
I am a beginner in writing. Tamil is like an ocean. There can be mistakes. So if you find any, please correct me.

தமிழ் இனி மெல்ல வாழும்...

Thanks for the read.. :)meet you soon :)