Pages

Sunday, July 17, 2011

நம் வரலாறு - பாகம் 4

விஜயநகரப் பேரரசு:

பல்லவர்களின் ஆட்சிக் காலம் முடிந்த பிறகு பதினான்காவது நூன்றாண்டில் விஜயநகரப் பேரறிசிடம் நம் தலை பணிந்தது. 1336-ஆம் ஆண்டு ஹரிஹர ராயர் என்ற அரசரால் தோற்றுவிக்கப் பட்ட இந்த சாம்ராஜ்ஜியம் பதினேழாம் நூற்றாண்டு வரை கர்நாடகத்தை மையமாகக் கொண்ட இந்த அரசு, பதினேழாம் நூற்றாண்டு வரை நம்மை ஆண்டது. கர்நாடகத்தில் பிரபலமான ஹம்பி என்ற நிலப்பகுதி அன்று விஜயநகரம் என்று தான் அழைக்கப் பட்டது.

இந்த பாகத்தில் நீங்கள் முக்கியமாக கவனிக்க வேண்டியது, சிறுகச் சிறுக தன் கூட்டை கட்டிய எறும்புக்கு அவ்வபோது உதவி செய்து விட்டு, அதில் சில அறைகளை கேட்டு வாங்கிக் கொண்டதோடு, எப்படி முழு கூட்டையும் ஒரு தந்திர நாகம் அபகரித்துக் கொண்டது என்பதைத் தான். அந்த நாகம், ஒல்லாந்தர்கள் (dutch) மூலமாக உள்ளே நுழைந்த ஆங்கிலேயர்கள்! அவர்கள் நுழைந்த விவரத்தை தெரிந்து கொள்வதற்கு முன், அதற்கு இட்டுச் செல்லும் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

ஹரிஹர தேவராயர் இருபது ஆண்டுகாலம் ஆட்சி நடத்திய பின்னர், அவருடைய சகோதரரான புக்க ராயரிடம் ஆட்சி சென்றது.புக்க ராயரும், ஹரிஹர ராயரும் வாரங்கல் என்ற தெலுங்கு பிரதேசத்தின் மன்னரின் கீழ் படைத் தளபதிகளாக இருந்து வந்தனர். அப்போது, அந்த மன்னரை முஹமது பின் துக்ளக் என்ற அரசர் வீழ்த்தி, இவர்கள் இருவரையும் கைதிகளாக தில்லிக்கு அனுப்பினார். அந்த துக்ளக், இந்த துக்ளக் போல் ‘நல்லவர்’ இல்லை போலிருக்கிறது. இசுலாமிய மதத்திற்கு மாறும் படி இவ்விருவரையும் வற்புறுத்தியிருக்கிறார். ஆனால், இவர்கள் வித்யரண்யா என்ற பிராமணரின் துணை கொண்டு தப்பித்து, விஜயநகரப் பேரரசை தொற்றுவித்ததனர். இப்படி உருவான பேரரசை புக்க ராயர் ஆண்ட பொது, ராமேஸ்வரம் வரை உள்ள தென் தமிழ்நாட்டை இந்த சாம்ராஜ்யத்தில் இணைத்தார். கோவா, ஒரிசா, சிலோன், மியான்மார் போன்ற இடங்களும் இவர் காலத்தில் தான் இணைக்கப் பட்டது.

இவரை தொடர்ந்த இரண்டாம் ஹரிஹரன், ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீசைலம் முதற்கொண்டு பல இடங்களை கையகப் படுத்தினார். இவ்வாறு விரிந்த விஜயநகரப் பேரரசின் வலையை ஒரு சுறா மீன் கடித்ததைப் போல அடுத்து வந்த விருபக்ஷ ராயரின் சில மாத கால ஆட்சி, இந்த அரசின் செயல்திறனுக்கு ஒரு களங்கமாய் ஆனது. பெண் ஆசையிலும், மது மயக்கத்திலும் இவர் ஆட்சி நடந்தது என்று நுனஸ் என்ற போர்த்துகீசிய பயணி எழுதியுள்ளார். இதனால் இவர் கோவா முதற்கொண்டு பல இடங்களை முஸ்லிம்களுக்கு தாரைவார்த்துக் கொண்டுக்க வேண்டியிருந்தது என்றும் அவர் எழுதியுள்ளார். இவர் தன் மகன்களின் கையாலேயே இறந்து இரண்டாம் புக்க ராயரின் ஆட்சிக்கு வழி வகுத்தார். ஆனால், அவரும் ஒரு ஆண்டு காலம் மட்டுமே ஆட்சி செய்ய முடிந்தது.

இவருக்கு பின்னால் வந்த தேவ ராயர் பதினாறு ஆண்டு காலம் ஆட்சி நடத்தினார். இவர் ஒரு பெண்ணிடம் மயங்கி அதன் காரணமாக வந்த போரில் தோற்றார் என்று கூறப் படுகிறது. ஆனால், சிலர் இதை மறுக்கின்றனர். பல்லவர்களைப் போல் அல்லாமல், இவர் செய்த தவறை ஈடு கட்டும் விதமாக இவருடைய மகன்களான ராமச்சந்திர ராயரும், வீர விஜய புக்க ராயரும் கூட எதையும் பெரிதாக சாதிக்காமல் மறைந்தனர். இப்படி சில காலம் 'மொக்கை'யாக சென்று கொண்டிருந்த ஆட்சி, இரண்டாம் தேவராயரின் ஆட்சியில் மறுபடியும் உயிர் பெற்றது. விஜயநகர சாம்ராஜ்ஜியத்தில் குறிப்பிடும் படியான அரசர்களுள் இவரும் ஒருவர்.

இவர் ஆட்சியில், ஒரிசா முதல் மியன்மார் வரை, சிலோன் முதல் குல்பர்கர் வரை எல்லா இடங்களும் விஜயநகரப் பேரரசின் கீழ் மறுபடியும் இணைந்தது. இவர ஆட்சிக் காலத்தில் விஜயநகரம் வந்த பெர்ஷியாவின் வரலாற்று ஆய்வாளரான அப்துர் ரசாக், "விஜய நகரப் பேரரசின் ஆட்சித் திறனுக்கு நிகர் எங்கும் இல்லை" என்றும், "என் கரு விழிகள் இந்த இடத்தை போன்ற அழகான இடத்தை பார்த்ததில்லை" என்றும் கூறியிருக்கிறார். இரண்டாம் தேவராயர், சிலோனிலிருந்து கலை நிபுணர்களை கொண்டு வந்து பல கோயில்களையும் கட்டினார்.

இவர் காலம் பொற்காலமாக கருதப் பட்டாலும், இவர் மகனான மல்லிகார்ஜுன ராயர் பொறுப்பை ஏற்றதும் திரும்பவும் பல இடங்களை இந்தப் பேரரசு இழந்தது. மல்லிகார்ஜுன ராயரின் காலத்தில் தான் போர்த்துகல் அரசர்கள் வடக்குப் பகுதிகளை கைபற்ற ஆரம்பித்தனர். இதற்குப் பின்னால் வந்த இரண்டாம் விருபக்ஷ ராயர் மற்றும் ப்ரௌத்த ராயன் ஆகியோர் சங்க மரபென்று அழைக்கப் பட்ட தங்கள் வம்சத்தை காக்கத் தவறி விட்டனர்.

சங்க மரபின் வீழ்ச்சி விஜயநகர பேரரசர்களின் சாளுவ மரபிற்கு வழி வகுத்தது. இந்த மரபின் முதல் மன்னர், சாளுவ நரசிம்ஹா தேவ ராயர். இவர் இழந்த இடங்களை திரும்பப் பெற முயற்சி செய்தாலும் கிளர்ச்சியாளர்களால் அது தடைப் பட்டது. இவரைத் தொடர்ந்து திம்ம பூபாளரும் நரசிம்ம ராயரும் சில காலம் ஆட்சி செய்துவிட்டு, 1491 -ஆம் ஆண்டு துளுவ மார்பிற்கு வழி விட்டனர்.

துளுவ மரபின் முதல் மன்னர் துளுவ நரச நாயகர். இவர் கன்யாகுமரி, மதுரை போன்ற இடங்களையும், சேர,சோழ தலைமைகளை தோற்கடித்து விஜயநகரத்தை விரிவாக்கம் செய்தார். இவர் காலத்தில் அரசும், இராணுவமும் பலம் பெற்று மற்றொரு பொற்கால ஆட்சிக்கு வித்திட்டது. இவருடைய மூத்த மகன் பெயர் வீரநரசிம்ம ராயர். இவர் ஆறு ஆண்டுகாலம் ஆட்சி நடத்திவிட்டு இறக்கும் தருணத்தில் தன் தமயனரான கிருஷ்ணதேவ ராயருக்கு முடி சூட்டும் படி ஆணை இட்டு மடிந்தார்.

கிருஷ்ணதேவ ராயரின் ஆட்சித் திறன், அவரை பலர் முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ளும் அளவுக்கு சிறப்பு வாய்ந்ததாக இருந்தது. இவர் தன் அன்னையின் நினைவாக நாகலாபுரம் என்ற அழகான புறநகரத்தை உருவாக்கியது முதல் பெருமை.

இவர் காலத்தில் விஜயநகரத்தின் ராணுவம் முழு வீச்சில் இருந்ததாகக் கருதப் படுகிறது. தொற்றுக் கொண்டிருக்கும் போரில் கூட கடைசி நேரத்தில் யுக்திகளை திருத்தி எழுதி வெற்றி காணும் திறன் இவரிடம் இருந்தது. இவருக்கு பெரும் தொல்லைகள் ஒரிசாவிலிருந்தும், கடல் வணிகத்தில் முன்னேறிக் கொண்டிருந்த போர்த்துகல் வானிபர்களிடமிருந்தும் வந்து கொண்டிருந்தது. இருந்தாலும் போர்த்துகல் அரசுடன் ஒரு நல்ல உறவை ஏற்படுத்திக் கொண்டு, கோவாவில் அவர்களுடைய மேலாட்சி அமைய இடம் கொடுத்தார். கஜபதி அரசர்களிடம் ஓரளவுக்கு வெற்றி கண்ட ஒரே விஜயநகரத்து அரசர் இவர் தான். இவருடைய வெற்றியில் முக்கியமானது, ராஞ்சி கோட்டையை கைப்பற்றியது தான். இந்த போரில் ஏழு லட்சம் போராளிகளும், ஐநூறு யானைகளும் ஈடுபட்டதாகக் தகவல். 16000 போராளிகளை இழந்து போராடி இந்த போரில் இவர் வென்றார். ஹரிதாசர், வ்யாசதீர்த்தர் போன்ற புலவர்களையும் இவர் ஊக்குவித்தவர்.

இவருடைய மற்றொரு பக்கத்தை பற்றி கூறவேண்டும் என்றால்,தன் பிள்ளையை விஷம் வைத்துக் கொன்றதற்காக தன்னுடைய பிரதம மந்திரியை குருடாக்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், இவருடைய தண்டணைகள் மிகக் கடுமையாக இருந்ததென்று வரலாற்று ஆய்வாளர்கள் எழுதியுள்ளனர். திருடினால் கை அல்லது கால் வெட்டப் படுமாம். கொலை செய்தால் தலை துண்டிக்கப் படுமாம். கொஞ்சம் ராஜாவையும், அழகிரியையும் காட்டுங்கப்பா!

இவருக்கு பின்னர், அச்சுத தேவ ராயரும், சதாசிவ ராயரும் துளுவ மரபை முடித்து வைத்து, அறவிடு மரபிற்கு இடம் கொடுத்தனர். அறவிடு மரபின் அரசர்களும், அவர்களின் முக்கிய பங்கும் கீழ் வருமாறு.

1. ராமராயர் - இவர் காலத்தில், முஸ்லிம் சுல்தான்களுடன் போரும், தலிகோட்டா போரும் நடந்தது. இந்த போர்களில், விஜயநகரம் சிதைவடைய எதிரிகள் காரணமாய் இருந்தனர். இந்த சிதைவடைந்த விஜயநகரம் தான் இன்று ஹம்பி என்று அழைக்கப் படுகிறது. அந்த சிதைவுகளை பார்த்து சத்ரபதி சிவாஜி மனம் கலங்கியது விஜயநகரத்தின் பெருமைக்கு சான்று. அங்கு சென்று பார்த்தல் மிச்சமிருக்கும் சிதைவுகளே ஆச்சர்யத்தை உண்டாக்கும்.

2. திருமல தேவ ராயர் - இவர் சிதைந்த விஜயநகரப் பேரரசை பெனுகொண்டா என்ற ஆந்திர நகரத்தை தலைநகராகக் கொண்டு மீட்கப் போராடினார்.

3. ஸ்ரீரங்கர் - இவர் சாம்ராஜ்ஜியத்தை விரிவாக்கம் செய்வதில் கவனம் செலுத்தினாலும் சுல்தான்களின் தொல்லைகள் தொடர்ந்தன. உதயகிரி என்ற இடத்தில் இவர் சுல்தான்களோடு செய்த போர் குறிப்பிடும்படியானது.

4. வேங்கடபதி தேவ ராயர்- பென்னார் போரில் சுல்தான்களை தோற்கடித்து, கோல்கொண்டா அரசர்களுடனும் போரிட்டு வெற்றி பெற்றவர் இவர். இவர் காலத்தில் சந்திரகிரி என்ற இடத்திற்கு தலைநகரம் மாற்றப் பட்டு, மிகவும் வலிமை வாய்ந்த வேலூர் கோட்டை ராணுவத் தளமாகவும், இரண்டாம் தலைநகரமாகவும் உபயோகம் செய்யப் பட்டது. இந்த வேலூர் கோட்டையை 1601 ஆம் ஆண்டு நாயகர்களிடமிருந்து இவர் கைப்பற்றினார்.

1608 ஆம் ஆண்டு, விழுப்புரத்தில் உள்ள செஞ்சியிலும், கோல்கொண்டாவிலும் வாணிகம் செய்து கொண்டிருந்த ஒல்லாந்தர்கள் (dutch) பழவேற்காடு (pulicat) என்ற இடத்தில் தொழிற்சாலை தொடங்க அனுமதி கோரினர். ஆங்கிலேயர்களும், ஒல்லாந்தர்கள் மூலமாக வாணிபத்தை தொடங்கினர். இது தான் நாகம் நாக்கை நீட்டிய முதல் தருணம். வேங்கடபதி தேவ ராயருக்கு மகன்கள் இல்லை என்று கூறினாலும், சக்க ராயர் என்பவர் இவருடைய மகன் தான் தான் என்று கூறிக் கொண்டார்.

5. இரண்டாம் ஸ்ரீரங்கர் - இவருடைய ஆட்சியில், ராஜ குடும்பத்தை வேங்கடபதி தேவ ராயரின் உத்தேச மகனான சக்க ராயர், வேலூர் கோட்டையில் சிறை வைத்தார். வேலூர் கோட்டையின் காவலர்களைக் கொன்று அவர்களை மீட்டவர் யச்சம நாய்டு என்பவர். ஆனாலும் இந்த விஷயம் சக்க ராயருக்கு தெரிந்து, ஸ்ரீரங்கரை படுகொலை செய்தார். ஆனாலும் அவருடைய மகன்கள் தப்பித்துவிட்டனர்.

6. ராம தேவ ராயர்- இவர் ஆட்சியில் திருச்சியில் நடந்த தோப்பூர் போர் முக்கியமானது. இந்த போரில் யச்சம நாய்டுவின் உதவியுடன் ஸ்ரீரங்கரை கொன்ற சக்க ராயர் வீழ்த்தப் பட்டார். இவர் காலத்தில் பழவேற்காடு, செல்கல்பட்டு மற்றும் மதுராந்தகம், வேலூருடன் இணைக்கப் பட்டது.

7. பேடா வேங்கட ராயர்- ஆகஸ்ட் 22, 1639 அன்று கிழக்கிந்தியா நிறுவனத்தின் (East India Company) பிராசிஸ் டே என்பவர், சந்த்ரகிரியின் அருகில் ஒரு தொழிற்சாலை கட்ட இவரிடமிருந்து அனுமதி பெற்றார். பின், இவருடைய வம்சத்தை சேர்ந்த மூன்றாம் ஸ்ரீரங்கர், பேடா வேங்கட ராயரின் அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்தார். இதை பயன்படுத்திக் கொண்டு, கிழக்கு கடற்கரை பகுதியை முற்றுகை இட, கோல்கொண்டா ஒரு பெரிய படையை அனுப்பியது. ஆனால், சென்னைக்கு அருகில் பேடா வேங்கட ராயர் அவர்களை தடுக்க, கோல்கொண்டா பின்வாங்கியது. பின் குறிப்பு: பேடா என்ற இனிப்புக்கும் இவருக்கும் எந்த சமந்தமும் இல்லை.

8. மூன்றாம் ஸ்ரீரங்கர் - இவர் காலத்தில் நாயகர்களின் வீழ்ச்சியும், கோல்கொண்டாவிடம் இவர் தோற்றதும் தான் முக்கியமான நிகழ்வுகள். 1670 ஆம் ஆண்டு இவர் இறந்து, விஜயநகரப் பேரரசிற்கு முற்றுபுள்ளியானார்.

5 comments:

Anonymous said...

yenna kindalaa? part iv nu yeluthitu just u r posting only one para?

is this history or clipping?

Anonymous said...

foto attachment yentha oruu?

very lovely located temple around the hills?

is this still exist?
i m getting angry on you for your poor presentation
kumar

kannan ramaswamy said...
This comment has been removed by the author.
kannan ramaswamy said...

If I am speaking about Hampi, it implies that the photos belong to that place. I have attached the photos near the paras which speaks about it. Problem is not in my presentation; it's with your concentration :)Anyways thanks for reading and your criticism

kannan ramaswamy said...

And I can see full post. Don't know why it looks like one para for you.