
உலகத்தரம், உலகத்தரம் என்று கூறுவார்கள். அந்த உலகத்தரத்தை ஒன்றுமில்லாமல் செய்துவிட்ட கதை கூந்தப்பனை.
கண்ணிகள், வேதாளம் ஒளிந்திருக்கும், அபாயச் சங்கு, கூந்தப்பனை என்று நான்கு குறுநாவல்களின் தொகுப்பு அடங்கிய புத்தகம்.
ஒரு விவசாயியின் வாழ்க்கையை சொல்லத் தொடங்கும் கண்ணிகள், கணவன் மனைவிக்கு இடையில் நிகழும் மனஸ்தாபம் மற்றும் அவர்களின் இருவரின் கண்ணோட்டங்களை சொல்லும் வேதாளம் ஒளிந்திருக்கும், வேலையில்லாத ஒருவனின் விரக்திகளைச் சொல்லும் அபாயச் சங்கு முடிவில், ஆண்மையில்லாத ஒரு அப்பாவி ஆடவனின் கதையைச் சொல்லும் கூந்தப்பனை.
பொதுவாக உலகத்தரம் என்றாலே மேற்கத்திய மாயை கொண்டவர்கள், அதிநவீன விமானங்களின் இடி முழக்கத்தையும், அழுக்குப் படாத நீல நிற கட்டிடங்களை மட்டுமே கற்பனை செய்வார்கள். கூந்தப்பனை, யதார்த்தத்தை சொல்லும் சிந்தனா சக்தியில் உலகத்தரத்தை மிஞ்சியிருக்கிறது.

தனக்கு ஆண்மையில்லை என்று திருமணத்திற்குப் பிறகு அறிந்து கொண்ட கணவன், மனைவியின் வாழ்க்கையை கெடுக்க நினைக்காமல் தன்னுடைய நண்பனுக்கு திருமணம் செய்து வைக்கிறான். முதலில் ஒப்புக்கொள்ளாத மனைவி, பிறகு நீங்களும் எங்களோடு தங்கினால் ஒப்புக் கொள்கிறேன் என்கிறாள். இந்த இடத்திலேயே சமுதாய எல்லைக் கோடுகளை தாண்டிவிட்டது கூந்தப்பனை.
மேலும், ஒரு புதிய தம்பதியினரின் படுக்கையறைக்கு அருகில் உறங்க நினைக்கும் ஆண்மை இல்லாத ஆடவனின் எண்ணச் சிதறல்களை ஆசிரியர் விவரிக்கும் ஒரு பத்தி, உலகத்தரங்களை வீசி எரிந்துவிட்டது.
தன்னால் முடியாத ஒன்றைத் தன் நண்பன் தரும் போது, தன்னுடைய முன்னாள் மனைவி எவ்வாறு மகிழ்ச்சி அடைகிறாள் என்று பார்க்கத் துடிக்கிறான் அந்த ஆடவன். அவ்விருவரையும் அணைத்துக் கொண்டு அவள் நெற்றியில் முத்தமிட விழைகிறான்.
சமூக நீதிகளால் அசிங்கத்திற்கு உள்ளாகும் இது போன்ற 'உண்மையான' எண்ணங்களை துணிச்சலாக வெளி உலகிற்கு எடுத்துக் கூறும் தைரியம் படைத்த ஆசிரியருக்குப் பாராட்டுக்கள்.
2 comments:
தைரியமான எழுத்தாளருக்கும் அறிமுகப்படுத்திய உங்களுக்கும் வாழ்த்துகள்
இன்னும் word verification ஐ நீக்கவில்லையா ?
இந்த வேர்டு சரிபார்க்கும் முறையை உடனே மாற்றுங்கள்... Iam also do it in fourth time.... No body will like it. இந்த என் நண்பனின் பதிவைப் பார்க்க -http://www.malartharu.org/2014/01/word-verification.html வலையில் பின்தொடர்வோர் பட்டியலை இணைக்க வேண்டுகிறேன்.
Post a Comment